அரசாங்கத்திற்குள் இரு குழுக்கள் இருப்பதால் இந்த அரசாங்கம் அதிக நாட்களுக்கு நீடிக்காது என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
சஜித் பிரேமதாஸ இரண்டு தேர்தல்களிலும் பொய் கூறவில்லை, உண்மையை கூறினார் ஆனால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
தற்போது பொய்கூறி வந்த இந்த அரசாங்கத்தால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.
அதனால் மக்களிடையே தற்போது அவர்களின் செல்வாக்கு குறைந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.