முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம்

நாட்டில் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் இலவச
சுகாதார சேவை இருக்கின்ற போது அதற்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க
வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியு்ளளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காலி (Galle) பத்தேகம நகரில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலவச சுகாதார சேவை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காகவும் இதய சத்திர சிகிச்சைகளுக்காகவும் பல வருடங்களாக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றார்கள்.

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம் | People Queuing For Surgery In Sri Lanka Sajith

ஐக்கிய மக்கள் சக்தி இந்த இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி
வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்துவோம்.

நாட்டில் இந்த அளவு சிக்கல்கள் இருக்கின்ற போது ரணிலும் (Ranil) அநுரவும் (Anura) ஒப்பந்தம்
செய்து கொண்டு அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றனர்.

இது நீண்ட காலமாக
வந்திருக்கின்ற தொடர்பாகும். நாட்டில் ஒரு மாற்றத்தை இதன் ஊடாக எதிர்பார்க்க
முடியாது. ரணிலுக்கும் அநுரவிற்கும் இதில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.

அநுர ரணில் டீல் 

220
இலட்சம் மக்களுக்காக இவர்கள் டீல் செய்துகொள்ளவில்லை. அவர்களுக்காகவே அவர்கள்
டீல் செய்து கொண்டுள்ளனர்.

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் : சஜித் விசனம் | People Queuing For Surgery In Sri Lanka Sajith

ஊழலை ஒழிப்போம் என்று கூறிய அநுர நல்லாட்சி காலத்தில் ஊழல் ஒழிப்பு குழுவின்
தலைவராக இருந்த போது அவர் செய்தது எதுவும் இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்து
கொண்டு திருடர்களை பிடித்த ஒரே குழு ஐக்கிய மக்கள் சக்தியாகும்.

ராஜபக்சக்கள்
நாட்டை வங்குரோத்தடையச் செய்தார்கள் என்ற தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியும்
ஐக்கிய மக்கள் கூட்டணி எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கையாலேயே நடந்தது“ என அவர் மேலும் தெரிவித்தார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.