இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள்ளே சில விசப்பாம்புகளும்
நட்டுவாக்காலிகளும் புகுந்திருக்கின்றன என முன்னாள் போராளியான கோணேஸ் தெரித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தாய் கட்சியாக காணப்படுவதே இலங்கைத் தமிழரசுக்
கட்சியாகும்.இந்நிலையில் அக்கட்சிக்குள்ளே பல குழறுபடிகளும், பதவி மோகத்திற்
அடிப்படையில் நீதி மன்றம்வரைக்கும் அக்கட்சி சென்றுள்ளது.
தமிழ் மக்கள் அனைவரும்
தமிழரசுக் கட்சியின் சொல்லைக் கேட்டு பயணித்த வரலாறு உண்மைதான்.ஆனால் இப்போது
அக்கட்சியினுடைய நிலமை என்னவெனில் தொடர்ந்து அக்கட்சிக்குப் பின்னால்
பயணிப்பதா? இல்லையா? என்ற நிலமைக்கு மக்கள் வந்திருக்கின்றார்கள்.
கட்சிக்கு ஆதரவு
இந்நிலையில்முன்னாள் போராளி கருத்து தெரிவிக்கையில், நான் வாக்குரிமை பெற்ற காலத்திலிருந்து இலங்கைத் தமிழரசுக்
கட்சிக்குத் தான் வாக்களித்து வருகின்றேன்.

ஆனால் அவர்களது கட்சிக்குள்
இருக்கும் பிரச்சனைகளை நீதிமன்றங்களிலும்,நாடாளுமன்றத்திலும்,
சர்வதேசத்திலும் சென்று கதைக்கின்றார்கள்.ஆளுக்கு ஆள் பொறாமைப்பட்டு அக்கட்சி
சின்னாபின்னமாகக் கிடைக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
எம்மிடம் மக்கள் கேட்கின்றார்கள் இந்த
கட்சிக்கு நாம் ஆதரவு செய்யலாமா என மக்கள் கேட்கின்றார்கள். அவர்கள்
வீட்டுக்குள் தீர்க்கின்ற பிரச்சனையை நாடுபூராகவும் பூதாகரமாக்கியுள்ளார்கள் என
காக்காச்சிவட்டையைச் சேர்ந்த சிவக்கொழுந்து தேவசகாயம் தெரிவிக்கின்றார்.
மக்களின் பிரச்சனை
இதேவேளை தமிழரசுக் கட்சி தற்போது நீதிமன்றம் வரைச் சென்றுள்ளது. அவர்களது
பிரச்சனைகளை அவர்களே தீர்க்க முடியாது விட்டால் மக்களின் பிரச்சனைகளை அவர்கள்
எவ்வாறு தீர்க்கப்போகின்றார்கள்.

அவர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதுதான்
அவர்களின் நோக்கமாகவுள்ளது. ஆள் மாறி மாறி இதைத்தான் செய்கின்றார்களே தவிர
அவர்கள் மக்களுக்கு அரசியல் செய்கின்றார்கள் இல்லை என குருமண்வெளியைச்
சேர்ந்த சபாரத்தினம் தெரிவித்துள்ளார்.

