முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவிலிருந்து அதிக அளவில் வெளியேறும் மக்கள் : வெளியான தகவல்

கனடாவிலிருந்து (Canada) வெளியேறும் மக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை சமீபத்திய கனேடிய புலம்பெயர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விலைவாசி உயர்வு, வீடுகள் தட்டுப்பாடு அல்லது ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளும் நோக்கம் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், மொத்தத்தில் கனடாவிலிருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.

வெளியேறும் மக்கள் 

2024ஆம் ஆண்டில், 106,134 பேர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளதாக கனடா புள்ளியியல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவிலிருந்து அதிக அளவில் வெளியேறும் மக்கள் : வெளியான தகவல் | Peoples Exit From Canada More Than Ever Before

1967ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவுபேர் கனடாவை விட்டு வெளியேறியுள்ளது 2024இல்தான். 

2025ஆம் ஆண்டில் முதல் காலாண்டிலேயே, கனேடிய வரலாற்றிலேயே முதல் முறையாக 27,086 பேர் கனடாவிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் மீண்டும் கனடாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.

குறிப்பாக, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலிருந்துதான் அதிக அளவில் மக்கள் வெளியேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா – ஒன்ராறியோ

2024ஆம் ஆண்டில், ஒன்ராறியோவிலிருந்து 50,680 பேர் வெளியேறியுள்ளார்கள். இந்த எண்ணிக்கை, ஒன்ராறியோவுக்கு அடுத்த இடத்திலிருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை ஒப்பிடும்போது 2.5 மடங்கு அதிகமாகும்.

கனடாவிலிருந்து அதிக அளவில் வெளியேறும் மக்கள் : வெளியான தகவல் | Peoples Exit From Canada More Than Ever Before

கடந்த ஆண்டு கனடாவிலிருந்து வெளியேறியவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு மக்கள் (48 சதவிகிதம் பேர்), ஒன்ராறியோவிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலேயே கனடாவிலிருந்து வெளியேறியவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகம்பேர் ஒன்ராறியோவிலிருந்துதான் வெளியேறியுள்ளார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்