சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிரதீப் ரங்கநாதனின் Dude படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருந்தது.
இருப்பினும் அந்த படம் கலாச்சார சீரழிவு என பலரும் விமர்சித்து வருகின்றனர். இணையத்தில் அந்த படத்திற்கு எதிராக பலரும் பேசும் நிலையில் தற்போது பிரபலங்களும் இந்த படத்தை தாக்கி பேச தொடங்கி இருக்கின்றனர்.

ஆபாச படமே மேல்..
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு “வயிற்றுப்பிழைப்புக்காக எதையவது சொல்லி படம் எடுப்பதா. நல்ல கலைஞனாக இருக்க வேண்டும் முதலில்.”
“லவ் ஸ்டோரி, காமெடி, ஆக்ஷன், எமோஷன், பேய், ஜாதி என எதை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.”
“மக்களை சீரழிக்கும் வகையில் படம் எடுப்பது கலைக்கு செய்யும் துரோகம். இப்படி கலாச்சார சீரழிவாக வரும் படத்தை விட ஆபாச படமே மேல்.”
இவ்வாறு பேரரசு கூறி இருக்கிறார்.


