யாழ்ப்பாணத்தில் (Jaffna) 1400 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 1400 போதை மாத்திரைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதேவேளை, கைதான நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/person-arrested-in-jaffna-with-drug-pills-1729699743

