பெருசு
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக லோ பட்ஜெட் திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அப்படி வைபவ் நடிப்பில் தற்போது திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் பெருசு. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தை இளங்கோ ராமநாதன் என்பவர் இயக்கியிருந்தார். நிஹாரிகா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
பெருசு திரை விமர்சனம்
மேலும் சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 18 பிளஸ் அடல்ட் நகைச்சுவை திரைப்படமாக பெருசு இருந்தாலும், குடும்ப ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜீவா பாலச்சந்திரன்
இந்த நிலையில், இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை வைத்து தான் ஆரம்பமும், முடிவும் இருக்கும். அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இளம் நடிகர் ஜீவா பாலச்சந்திரன்.
இவர் இதற்கு முன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சித்திரை செவ்வானம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்று வரும், பெருசு திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..