பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amrasuriya) எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ருஹுணை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஜீவ அமரசேனவே அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் காரணங்கள்
அவர் தனது மனுவில், ருஹுணை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து தான் அகற்றப்பட்டமையானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் தொடர்புடைய அரசியல் காரணங்களின் அடிப்படையில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி இந்த வழக்கின் முதல் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
அத்துடன், கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகியோர் ஏனைய பிரதிவாதிகளாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.