தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்து அறிவிப்பதற்காக ஆறு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre) குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், 070 211 7117, 011 366 8032, 011 366 8087, 011 366 8025, 011 366 8026, 011 366 8019 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்
அத்தோடு, இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ஆயுதப்படை மற்றும் காவல்துறை ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.