நாட்டில் ஒரு தடுமாற்றமான சூழல் காணப்படுகிறது.
அதனை நாம் அறிவோம், வெற்றி தோல்விக்கு அப்பால் தமிழ் மக்களது எதிர்காலத்தினை
கருத்தில் கொண்டு நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரைசந்திரகாந்தன்(sivanesathurai santhirakanthan) தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று
(17.10.2024) திருகோணமலையில்(trincomale) இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வேட்பாளர்கள் அறிமுகம்
குறித்த நிகழ்வில் பங்கேற்ற அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற
தேர்தலில் தமது கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும்
வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஆதிக்குடிகளது காணிகளை காப்பாற்ற வேண்டும்
திருகோணமலை மாவட்டத்தினை பொறுத்தவரையில், தோப்பூரிலிருந்து வரும் காணி
மாபியாக்களது கைகளில் இருந்து திருகோணமலை எல்லைக் கிராமங்களில் வசிக்கும்
ஆதிக்குடிகளது காணிகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தல்
வாய்ப்பினை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய சக்தியாக நாம் உருவெடுத்து வருகிறோம். பலமான
அதிகாரப் பொறுப்புடன் ஒரு பலமான சக்தியாக மக்களுக்காக வாழும் ஒரு இயக்கமாக
நாம் மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.