முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.. பிரபு எம்பி ஆதங்கம்

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில்
சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக
இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (02)
பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில்
ஹந்துன்நதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை
முன்னெடுத்து வருகின்றோம்.

நெல் கொள்வனவு 

அதனடிப்படையில் மட்டக்களப்பில் பெருந்தெருக்கல்
மற்றும் போக்குவரத்து விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின்
அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் உள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் பல
திட்டங்களை நடைமுறைபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள்
எடுக்கப்பட்டன.

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.. பிரபு எம்பி ஆதங்கம் | Pillayan Sivanesathurai Sandrakanthan Prabhu Mp

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எந்தவோரு செயற்பாடுகளை செயல்படுத்த முடியாது
என கூக்குரல் இட்டு திரிந்த எதிர்கட்சியினர் இன்று அடங்கி போய் இருக்கின்றனர்.

இன்று சிறுபோக வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில்
நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்மானிப்பதற்கு கூட முடியாத கடந்த கால அரசாங்கம்
இருந்தது.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பெறுப்பேற்ற பின்னர்
நெல்லுக்கான நிர்ணய விலையை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் அதனை கொள்வனவு
செய்வதற்காக 6 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

பல குற்றச்செயல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு.. பிரபு எம்பி ஆதங்கம் | Pillayan Sivanesathurai Sandrakanthan Prabhu Mp

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக நீதி அமைச்சர் பல விடயங்கள் தொடர்பாக கலந்து
ஆலோசித்து வருகின்றதுடன் அதனை திருத்துவது தொடர்பாக சட்டத்தரணிகள், சமூக
அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களுடன் கடந்தவாரம் கலந்துரையாடியுள்ளார். அதனை மறுசீரமைக்க கலந்து ஆலோசித்துள்ளோம்.

பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே பல மோசமான செயல்களில்
சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகள் மோற்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் எந்த முடிவு வருகின்றதோ அந்தடிப்படையில்
தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும்.

தேசிய மக்கள் கத்தி மக்களின் நலன்சார்ந்த பணியை முன்னெடுத்து வரும் அரசாங்கம். மக்களின் ஆதரவுடன் நீடித்து பயணிக்கும் என எதிர்கட்சியினருக்கு நாங்கள் சவால்
விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.