உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) திட்டமொன்றை முன்வைக்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புள்ள இருவரிடமும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ரஷ்யாவுக்குள் ஊடுருவலை முன்னெடுத்து மூன்று வாரங்களாகியுள்ள நிலையில், தங்களின் திட்டத்தின் ஒரு பகுதி அந்த ஊடுருவல் எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அடுத்த நகர்வு
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவை கட்டாயப்படுத்துவதே தங்கள் திட்டத்தின் முதன்மையான நோக்கமெனவும் மற்றும் அது நிறைவேற வேண்டும் என்பது தங்களின் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விளக்க மறுத்துள்ள ஜெலென்ஸ்கி, கமலா ஹாரிஸ் (Kamala Harris
) மற்றும் டொனால்ட் ட்ரம்புடனும் (Donald Trump) தங்கள் அடுத்த நகர்வு அல்லது திட்டம் என்னவாக இருக்கும் என்பதை விளக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள்
அத்தோடு, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் (New York) முன்னெடுக்கப்படும் ஐக்கிய நாடுகள் மன்ற கூட்டத்திற்கு தாம் செல்ல இருப்பதாகவும் அப்போது ஜனாதிபதி பைடனை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போர் தொடர்பில் புடினுடன் (Vladimir Putin) எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என ஜெலென்ஸ்கி தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.