ஜேர்மனியில் (Germany) சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு ஜேர்மனியில் உள்ள வீட்டின் மொட்டை மாடி ஒன்றில் விமானம் மோதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
எரிந்த விமானம்
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியாகியதுடன் அதில் ஒருவர் விமானியாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மற்றொருவர் விமானத்தில் இருந்தாரா அல்லது தரையில் இருந்தாரா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
விமான விபத்திற்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

