இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தனது உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கை வந்தடைந்தார்.
விஜயத்தின் ஒரு பகுதியாக, அவர் இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அதற்கமைய, இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் அவர்கள், ஊடக பரப்புகளில் எவ்வித அறிவிப்புக்களும் இல்லாத நிலையிலேயே பிரதமரை சந்தித்திருந்தனர்.
அதேநேரம், இந்த உரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின் பங்கேற்பு தொடர்பில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்திடம், பிரதமர் மோடியினை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட அனுமதி கோரலின் போது, சிறீதரனின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

