ஒக்டோபர் 07 தாக்குதலின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நெதர்லாந்தின் (Netherlands) தலைநகரான அம்ஸ்டர்டாமில் (Amsterdam) நடந்த நிகழ்வுகளில் பதற்றங்கள் வெடித்த நிலையில், பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க அம்ஸ்டர்டாமில் மக்கள் கூடியிருந்த நிலையில், அங்கு பாதுகாப்புக்காக கலகத்தடுப்பு படையின் அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதன் போது, இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் உரைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
சட்ட மீறல்
அதனை தொடர்ந்து, முகங்களை மூடிக்கொண்டும், கொடிகளை அசைத்தபடியும் இருந்த பல டசன் பலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கலகத்தடுப்பு படையினர் இஸ்ரேலிய கூட்டத்தில் இருந்து பிரித்து வைப்பதற்காக சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர், ஆனால் பின்னர் அவர்கள் “பொதுக்கூட்டங்களில் சட்டத்தை மீறியதற்காக” குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.