நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர்
பா.அரியநேத்திரனுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதி காவல்துறை மா அதிபரால்
விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கையை தொடர்ந்து குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை பாதுகாப்பு
இதனடிப்படையில், அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (MSD) இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (17) முதல்
பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் (MSD) ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இரண்டு பேரை மாத்திரம் கோரியதாக
தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.