உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரைவில் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கைது செய்யப்படுவார் என தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெறவுள்ளது.
விசாரணைகள்
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடரும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

அத்துடன், குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்தும் நடத்தி வருகிறது.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

