Courtesy: Sivaa Mayuri
பொதுமக்களுக்கு சேவை செய்வதில் அரசியல்வாதிகளின் அடிப்படைப் பாத்திரத்தை ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் பொதுக்கூட்டமொன்று நேற்று இரவு காலி-ஹபராதுவ பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது.
அகிம்சை அரசியல்
இதன்போது உரையாற்றிய நாமல் ராஜபக்ச,மக்களால்தான் அரசியல்வாதிகள் செயற்படமுடிகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்
அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்காக மக்கள் அவர்களை தேர்வு செய்கிறார்கள்.
எனவே, அந்த மரியாதையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அகிம்சை அரசியலுக்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்திய அவர், எதிரெதிர் தளங்களின் நற்பெயரை சேதப்படுத்துவதன் மூலம் நாட்டின் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.