கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களை வகித்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளில் 11 பேர் மாத்திரமே அவற்றை மீளக் கையளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் 31 அரசியல்வாதிகளுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை மீளக்கையளிக்குமாறு தற்போதைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் காலத்தில் அமைச்சர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது தொடர்பில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு வீடுகள் கையளிப்பு
தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைகளின் அரசாங்க சலுகைகள் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பின் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திடலில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.