பூவே உனக்காக
ரஜினி மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஞ்சு அரவிந்த்.
1996ம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக என்ற படம் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அதன்பின் தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவில் பக்கமே வரவில்லை.
சினிமாவில் இருந்து விலகி இருந்தவர் சமீபத்தில் தனது வாழ்க்கை, சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன் டாக்

வாழ்க்கை
அஞ்சு அரவிந்த் கூறியதாவது, முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது, பின் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி 2வது திருமணம் செய்துகொண்டேன்.
ஆனால் அந்த திருமணமும் சோகத்தில் முடிந்தது, கல்யாணம் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது கணவர் இறந்துவிட்டார்.

இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன், அதன்பிறகு வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது.
தற்போது அஞ்சு அரவிந்த்திற்கு அவரது பள்ளி பருவத்து நண்பர் சஞ்சய் அம்பல பரம்பத் என்பவரை சந்திக்க நேர்ந்துள்ளது. இவர்களது நட்பு பின்னாளில் காதலாக மாற 5 ஆண்டுகளாக பெங்களூரில் அவருடன் வசித்து வருகிறாராம்.


