இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிரையன் உதைக்வே ஆண்டகை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09.10.2024) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே பாப்பரசரின் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை வெற்றிமிக்க மற்றும் சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி உதைக்வே ஆண்டகை, அதற்காக தாம் மனமார வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொலைநோக்குப் பார்வை
இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய உதைக்வே ஆண்டகை, மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
you may like this…..






