வடசென்னை
இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த தரமான படைப்புகளில் முக்கியமான ஒன்று வடசென்னை. நிலம் சார்ந்த நடக்கும் அரசியலையும், அதனால் பாதிக்கப்படும் மக்களை பற்றியும் இப்படத்தில் பேசியிருந்தார்.
தமிழகத்தில் இரண்டு நாட்களில் விடுதலை படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.. இதோ பாருங்க
இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா என பலரும் நடித்திருந்தனர். இதில் அமீர் நடித்திருந்த கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்கவிருந்தார் என்பதை நாம் அறிவோம்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
ஆனால், சமுத்திரக்கனி ஏற்று நடித்த கதாபாத்திரத்திலும், முதலில் வேறொரு நடிகர் நடிக்கவிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சமுத்திரக்கனி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குனருமான தமிழ் தான்.
விடுதலை 2ஆம் பாகம் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த நடிகர் தமிழ் தான், வடசென்னை படத்தில் குணா கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தாராம். மூன்று நாட்கள் நடித்த இவர், பிறகு தனக்கு இது வரவில்லை என கூறிவிட்டாராம். இதன்பின் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி கமிட்டாகியுள்ளாராம்.
இதனை அவரே நம்முடைய சினிஉலகம் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அவர் விடுதலை 2 படத்தின் அனுபத்தையும் இதில் பகிர்ந்துகொண்டார். அவருடைய முழு பேட்டியையும் இங்கு பாருங்க..