சீரியல் நடிகை
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் கனிஹா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா என பலர் நடிக்க பெண்களின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் ஒளிபரப்பான இந்த தொடரின் முதல் சீசன் முடிவுக்கு வந்துவிட்டது.
பின் சில மாதங்களில் 2வது சீசன் தொடங்கப்பட்டு சில கதாபாத்திர மாற்றங்கள் நடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
மதுமிதா
முதல் சீசனில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்துவந்த மதுமிதா 2வது சீசனில் இல்லை. அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகை மதுமிதா தனது தோழியுடன் சேர்ந்து இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் எடுத்த போட்டோ, வீடியோக்களை தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டு வருகிறார்.