Courtesy: H A Roshan
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று (04) இந்த அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நாளையும் நாளை மறு தினமும் நடைபெறவுள்ளது.
கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள்
இதன்போது, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.