தாய்லாந்தின் (Thailand) பாங்கொக் (Bangkok) நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் (Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra) பாங்கொக்கில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார்.
சரிந்து விழுந்த கட்டடம்
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28) 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து தலைநகர் பாங்கொக்கில் ஒரு கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.
கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடத்துக்குக் கீழ் 40க்கும் அதிகமான ஊழியர்கள் மாட்டிக்கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இதன் தாக்கம் தாய்லாந்து மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/DTCG8o6Ssj4