பிரபாஸ்
பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.
முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்த மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம்.. இணையத்தில் வைரலாகும் தீபிகாவின் பேச்சு!
எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், ஹீரோவாக இவர் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இவர் நடித்த முதல் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அவரது முதல் படம் ஈஷ்வர். இந்த படம் 2002-ம் ஆண்டு நவம்பர் 11 அன்று வெளியானது. வெறும் ரூ. 1 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 3.6 கோடி வசூலை ஈட்டியது.
பிரபாஸ் தனது முதல் படத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினார். ஆனால், இப்போது அவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

