முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுக்கு ஆதரவு கோரி மட்டக்களப்பில் பரப்புரை கூட்டம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கின்ற தீர்மானம் எமது சமூகத்தின்
எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கின்றது. மக்கள் கவனமாக சிந்தித்து கேஸ்
சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதுவே எமது தேவையாக உள்ளது என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (15.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது
இவ்வாறு கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கின்ற தீர்மானம் எமது சமூகத்தின்
எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கின்றது. வரிகளை குறைப்பதாக அநுரகுமார
திஸாநாயக்க கூறுகின்றார். வறுமைப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் 20
ஆயிரம் ரூபா கொடுப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார்.

நாடாளுமன்ற தேர்தல் 

சிந்தித்துப் பாருங்கள் மக்களே நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக
வெற்றி வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவின் பக்கமே உள்ளது ஜனாதிபதியினால்
குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் நிவாரணங்கள் அனைத்துக்கும் திட்டங்கள் முன்பே
அத்திவாரம் இடப்பட்டுள்ளன.

ரணிலுக்கு ஆதரவு கோரி மட்டக்களப்பில் பரப்புரை கூட்டம் | Prapoganda For Ranil In Batticaloa

ரணில் விக்ரமசிங்கவை தவிர யார் வந்தாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். மீண்டும் அதிக பொருட்செலவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றாலும் யார்
வெல்லுவார்கள் என்றே தெரியாது.

இவ்வாறான நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியைத் தவிர யார் வென்றாலும்
அவர்கள் வழங்கும் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படும்.

மீண்டும் மூன்று
மாதத்தில் வரிசை யுகம் உண்டாகும் ரணிலை அழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அத்தியாவசிய பொருட்களுக்காக மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் மக்கள் கவனமாக
சிந்தித்து கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அதுவே எமது
தேவையாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.