நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரியா வாரியர் அதிகம் பேசப்படும் நடிகையாக மீண்டும் மாறி இருக்கிறார்.
அஜித் மகன் ரோல்..
இந்நிலையில் குட் பேட் அக்லீ படத்தில் அஜித் மகன் ரோலில் நடிக்க பிரேமலு பட ஹீரோ நஸ்லென் தான் தேர்வாகி இருக்கிறார். ஆனால் இயக்குனர் ஆதிக் அஜித் மகன் ரோலுக்காக அவரை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அவர் ஏற்கனவே அந்த நேரத்தில் ஆலப்புழா ஜிம்கானா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தாராம். அதன் ஷூட்டிங் இருந்ததால் குட் பேட் அக்லீ பட வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என அவரே சமீபத்தில் கூறி இருக்கிறார்.