நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
இதனை தமிழ் மக்கள் மிகவும் ஒரு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) மகாவித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்த
பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘‘தமிழ் மக்களுக்கு உரிய நிலையான அரசியல் தீர்வையும் சாதகமாகவும் காணப்படுகின்ற
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தமிழரசு கட்சி ஆதரிக்கின்றது.
சஜித் பிரேமதாஸவின் பேச்சுக்கு முதல் பேச்சாக என்னுடைய பேச்சு கடந்த பிரசார மேடையில் அமைந்திருந்தது.
இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்
கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினோம், ஆனால் ஜனாதிபதி தேர்தல்
குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியின் தீர்மானிக்கின்ற ஒரு
நிலைமை காணப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல்
இருப்பினும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி
தேர்தலில் ஜனாதிபதி தேர்தல் மேடையில் இறுதி தேர்தல் மேடையில் மூலம் தமிழரசு
கட்சியின் சார்பாக நான் அங்கு உரையாற்றி இருந்தேன்.
இதன் மூலம் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் திசை திரும்பிப் பார்க்கின்ற ஜனாதிபதி தேர்தலாக இது அமைய பெற்றுள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன். என்றார்.