காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று(6) ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தேசபந்து தென்னகோனுக்கு, காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக தேசபந்து தென்னகோன் தனது ஓய்வூதியம் மற்றும் பாதுகாப்பு சலுகைகள் அனைத்தையும் இழப்பார் என கூறப்பட்டுள்ளது.
பதவி நீக்க பிரேரணை
தேசபந்து தென்னகோனைகாவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, பதவி நீக்க பிரேரணை அன்றைய தினமே நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.
புதிய காவல்துறை மா அதிபர்
இதேவேளை, ஜனாதிபதி இன்று அரசியலமைப்பு சபைக்கு காவல்துறை மா அதிபர் பதவிக்கான வேட்புமனுவை சமர்ப்பிப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் உட்பட ஆறு பெயர்கள் குறித்த பதவிக்கு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

