ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் திகதி நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான உரையொன்றையும் அவர் ஆற்றவுள்ளார்.

அத்துடன், அங்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் சந்திப்புகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் பின்னர் ஜப்பானிய பிரதமர் சிகேரு இசிபாவின் அழைப்பின் பேரில் செப்டம்பர் 27ம் திகதி ஜப்பானுக்கான சுற்றுப் பயணம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

