முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய இராஜதந்திரிகள் ஐவர் ஜனாதிபதியால் நியமனம்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நியமித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி உத்தியோகபூர்வ நியமனங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. 

நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக டபிள்யூ.ஜி.எஸ் பிரசன்னவும், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசார்ட், ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகர, குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்க மற்றும் எகிப்திற்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச சந்தை வாய்ப்புகள் 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இராஜதந்திரிகளின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அந்தந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அவர்களின் தேவையை சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய இராஜதந்திரிகள் ஐவர் ஜனாதிபதியால் நியமனம் | President Appoints Five Diplomats

வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையின் இராஜதந்திரிகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி திஸாநாயக்க கூறியுள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.