இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் வைஸ் மார்ஷல் எல்.எச். சுமனவீரவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல்
நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்க இன்று (04 ) ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீரவிடம் ஒப்படைத்துள்ளார்.