முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம்

 “சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து அதிபர் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(03.05.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தலைமையில் இடம்பெற்ற போதே அவர் அதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.. “எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளோம் அதில் ஒன்றுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஆகும்.

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

மரக்கறி விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

அதிபர் தேர்தல்

வடகிழக்கு மக்கள் சோற்றுக்காக தான் போராடினார்கள் என்பது அதிபர் வேட்பாளர் அனுர குமார திசாநாயக்காவின் கணிப்பு. அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்கிறார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ளவர்களை அழைத்து கூறவேண்டும்.

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம் | President Election Sri Lanka Tamil Canditate Issue

அதுமாத்திரமின்றி இதனை தெற்கில் உள்ள மக்களுக்கும் தெரிவித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை பகிரங்கமாகக் கொண்டு வரவேண்டும்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நாங்கள் சுயமாகச் செற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம், எங்களது உரிமைகளைப் பறிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.

நீலப் பொருளாதார மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ளும் இரா.சாணக்கியன்...!

நீலப் பொருளாதார மாநாட்டில் பேச்சாளராக கலந்து கொள்ளும் இரா.சாணக்கியன்…!

பொது வேட்பாளர் 

எங்களால் நிறுத்தப்படுகின்ற பொது வேட்பாளர் அதிபராக தெரிவு செய்யப்பட மாட்டார் அது அனைவரும் அறிந்த விடயம் நாங்கள் வாக்களித்து தெரிவு செய்யப்படும் அதிபர் எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை.

பொதுவேட்பாளர் விடயத்தில் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்: ஜனா எம்.பி. திட்டவட்டம் | President Election Sri Lanka Tamil Canditate Issue

கடந்த 6 அதிபர்களில் 2 அதிபர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு நாங்கள் வாக்களித்திருக்கின்றோம். எனவே நாங்கள் வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவரும் எமக்கு ஒன்றும் செய்யவில்லை.நாம் தற்போது சிதறுண்டு கிடக்கின்றோம்.

இக்காலத்தில் எமது பலத்தை நாம் காட்டாமல் விட்டால் எங்களது சந்ததிகூட நிம்மதியாக வாழமுடியாத நிலையாகிவிடம்.

எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் தேவை ஏற்படின் சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து அதிபர் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள், சுயநலத்திற்காகவும், தங்களுடைய கட்சி நலத்திற்காகவும் அரசியல் செய்பவர்கள், என்கின்ற நிலைக்கு தாங்களே தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்” என அவர்  தெரிவித்துள்ளார். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.