ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.
இந்த விஞ்ஞாபனம் இன்று (29.8.2024) காலை கொழும்பில் (colombo) நடைபெறும் விசேட வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது.
அதற்கமைய ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya ) தேர்தல் விஞ்ஞாபனமும் இன்று வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் விஞ்ஞாபனத்தை முதலில் மாநாயக்க தேரர்களிடம் கையளித்து ஆசி பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.