முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களின் ஒவ்வொரு ரூபா பணம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி

மக்களின் ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினங்களைக் கூட இன்றளவு குறைத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள உறுதி

மேலும் தெரிவிக்கையில், வரி செலுத்தும் அனைவரினதும் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யப்படும். பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரி இது.

President Programme

மக்களுக்கு வினைத்திறனான பொது சேவைகளை வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படும். அரச இயந்திரத்திற்குள் காணப்படும் கருப்பு பொறிமுறையை உடைத்து அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படியும் வகையில் ஒரு செயல்முறை உருவாக்கப்படும் என கூறியுள்ளார்.

வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

President Programme

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இணையத்தளம்

இதேவேளை, 2024 – 2025 நிதியாண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு தொடர்புடைய வரி செலுத்தும் அறிக்கைகளை சமர்ப்பிப்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக பிரத்தியேகமாக செய்யப்படும்.

மேலும் இந்த இணையத்தளம் இன்று காலை பொதுமக்களுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதன்படி, ஜனாதிபதியன் பங்கேற்புடன் முதலாவது வரி அறிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.   

President Programme

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.