ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலாளர் மட்ட சேவைகள் 2025 பெப்ரவரி 7ஆம் திகதி
ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இந்த திட்டம்
ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு மிகவும் நேர்த்தியான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த திட்டம்
செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டம்
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 341 பிரதேச செயலகங்கள் மற்றும் அவற்றின்
நிறுவப்பட்ட துணை அலுவலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதி சேவைகள் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பிரதேச செயலகங்களுக்கான முன்னோடித் திட்டம் ஏற்கனவே
செயற்பாட்டில் உள்ளது.
இந்தப் புதிய சேவை குறித்து பிரதேச செயலாளர்களுக்கு தெளிவூட்டும் வகையில்
இன்று ஒரு இணையக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் புதிய சேவை வழங்கல் செயன்முறை தொடர்பான விபரங்கள், இந்த
அமர்வின் போது தெளிவுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.