முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும்
ஜனாதிபதி, வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த
திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார்
நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த
நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தமிழ்
ஆர்வலர்கள் குழுவை இன்று (30) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு
உத்தரவிட்டுள்ளார்.

வெளியாகியுள்ள உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க கலந்துகொள்ளும் வேளையில், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்
தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன், போராட்டக் குழுவின் யாழ்ப்பாண மாவட்டத் தலைவர்
பொன்ராஜ் பிரேம் டக்ளஸ் பிரபாகரன், தற்காலிக சுகாதார ஊழியர்கள் சங்கத் தலைவி
எஸ். ஜெஸ்மின் மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா
கோமகன் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக,

யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று (29)
நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற பதிவாளரின்
கையொப்பத்துடன் வெளியாகியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | President S Jaffna Visit Court Bans Protest

1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 106 (1) (2)
(3) இன் கீழ், போராட்டங்களை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு
யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரியுள்ளதாக நீதிமன்ற
உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்களில் ஈடுபட்ட நீண்ட வரலாறு

பொலிஸாரால் பெயரிடப்பட்ட ஐவரையும் இன்று 30)  காலை 9.30
மணிக்கு நேரடியாகவோ அல்லது சட்டத்தரணிகள் ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு நியாயங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் யாழ்.விஜயம் : போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை | President S Jaffna Visit Court Bans Protest

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள
மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்
பங்கேற்கவுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் போராட்டங்களில் ஈடுபட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட
கட்சியின் தலைவரான ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில்
தலையிடப்போவதில்லை என பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.