முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள திலித் ஜயவீரவுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த கட்சியின் தலைவரான திலித் ஜயவீர சார்பில் இன்று (13) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

ஓகஸ்ட் 04 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டின் போது ‘சர்வஜன பலய’ கட்சியின் செயற்குழு உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜயவீரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார்.

கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர | Presidential Candidate Dilith Jayaweera

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் நாளை (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரசியல் கட்சி 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு ஓசல ஹேரத்தும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி.லியககேவும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும், தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பில் எஸ்.கே.பண்டாரநாயக்கவும், தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் விஜயதாஸ ராஜபக்சவும், ஐக்கிய சோஷலிச கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும், புதிய சீஹல உருமய கட்சி சார்பில் சரத் மனமேந்திரவும், மற்றும் ஜனசேனா முன்னணி சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன தேரரும், அருனலு மக்கள் முன்னணியின் சார்பில் கே.ஆர்.கிறிஷானும், தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும், சோசலிச சமத்துவ கட்சி சார்பில் பானி விஜேசிறிவர்தன, நவ சமசமாஜக் கட்சி சார்பில் பிரியந்த புஸ்பகுமாரவும், எங்கள் மக்கள் சக்தி சார்பில் ஜே.டீ.கே.விக்கிரமரத்ன, இலங்கை சமசமாஜக் கட்சியின் சார்பில் மஹிந்த தேவகே, ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் அப்துல் மொஹமட் இன்பாஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அனோஜ டி சில்வா ஆகியோரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர | Presidential Candidate Dilith Jayaweera

அத்துடன் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி என்ற பிரிவில் றுஹுணு மக்கள் முன்னணி சார்பில் அஜந்த டி சொய்சா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சுயேட்சை வேட்பாளர்

இதேவேளை சுயேட்சை வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்தி ரத்ன, கே.கே.பியதாஸ, ஆனந்த குலரத்ன, அக்மீமன தயாரத்ன தேரர் , சிறிபால அமரசிங்க, சரத் பொன்சேகா, அன்டனி விக்டர் பெரேரா, ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ், மானகே பேமசிறி, அனுர சிட்னி ஜயவர்தன, டீ.எம்.பண்டாரநாயக்க, எம்.திலகராஜா, ரொஷான் ரணசிங்க, பா.அரியநேத்திரன் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர | Presidential Candidate Dilith Jayaweera

கட்டுப்பணம் செலுத்துதல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் நாளை காலை 9 மணி முதல் 11 மணிவரையான காலப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.