ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ஒருவர், தனது மனையினால் தனக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சட்ட நடைமுறையாக்க சபையிடம் பாதுகாப்பு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
தனது மனைவியுடன் தற்போது வசிக்கவில்லை எனவும், இதனால் தனது மனைவியிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என அந்த சபை கூறியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.
நிராகரிக்கப்பட்ட கோரிக்கை
அவற்றில் சில நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிலவற்றைக் கருத்தில் கொண்டு விவாதிக்கப்பருவதாகவும் சட்ட நடைமுறையாக்க சபை தெரிவித்துள்ளது.
இதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கியொன்றை கோரியள்ளார்.
குறித்த கோரிக்கை விடுத்த வேட்பாளருக்கு அச்சுருத்தல் நிலைமை ஏதும் இல்லாமையால் இது நிராகரிக்கப்பட்டுள்ளது.
மனைவியிடமிருந்து அச்சுறுத்தல்
மேலும், தனது மனைவியுடன் வசிக்காத மற்றொரு வேட்பாளர், தனது மனைவியிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சட்ட நடைமுறையாக்க சபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முன்னதாக, எதிர்வரும் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அண்மையில் விசேட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.