முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாத்திரமே இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்தார் என நகர அபிவிருத்தி மற்றும்
வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல (Battaramulla) – தலவத்துகொடவில் உள்ள பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, “சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 104 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதால் நாங்கள் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியை உருவாக்கினோம்.

இந்த தேர்தலில்  அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்.

சம்பள முரண்பாடுகள்

நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டின் மீது அக்கறையுள்ள ஒரு குழு ஒன்று கூடி ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம் | Presidential Election 2024 Prasanna Ranatunga

எதிர்காலத்தில் கட்சி அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த நாட்களில் ஊடகங்களில் பேசப்படும் ஒரு விடயம், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் பற்றிய சுற்றறிக்கை ஆவணம் எதுவுமில்லை என்பதுதான்.

அந்த அமைச்சரவைப் பத்திரம் என்னிடம் உள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தில், அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய ஆர் செனவிரத்ன தலைமையிலான ஜனாதிபதி நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரவு செலவுத் திட்டம்

CS/CM/SD/324/2024 என்ற இந்த அமைச்சரவைப் பத்திரத்தில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை ஏற்ற ரணில்: பிரசன்ன ரணதுங்க புகழாரம் | Presidential Election 2024 Prasanna Ranatunga

சமூக ஊடகங்களில் போலியான மற்றும்
திருத்தப்பட்ட புகைப்படங்களால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள்
புரிந்துகொண்டுள்ளனர்.

நாட்டை நேசிக்கும் மக்கள் இன்றும் ரணில்
விக்ரமசிங்கவிற்கு உதவ தீர்மானித்துள்ளனர்”  என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.