2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)வெற்றி பெறுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்
எனினும் அவர் அது அதிபர் தேர்தலா? பொதுத் தேர்தலா? என்று குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடவில்லை.