நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணிலால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardana) அறிவித்துள்ளார்.
அதிகாரங்களின் அடிப்படை
குறித்த அறிவிப்பை இன்று(25) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அவர் சபைக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12 ஆவது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/presidential-proclamation-to-armed-forces-1714025547

