பரந்தன் கமநல சேவை நிலையத்தினால் கிளிநொச்சி – விழாவோடைப்பகுதியில் விவசாய வீதி அமைப்பு என்ற பெயரில்
அபிவிருத்தி எதுவும் முன்னெடுக்கப்படாமல் பல இலட்சம் ரூபா அரச நிதி முறைகேடாக
பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக விவசாயிகள் பலரிடமிருந்தும்
பெருந்தொகை நிதி அறவிடப்பட்டதாகவும், அளவீடு செய்யப்பட்டு அனுமதிகள் எதுவுமின்றி பெருந்தொகையான
மரங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிளிநொச்சி பரந்தன் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட விழாவோடை குளத்தின்
நீரேந்து பகுதிக்குரிய எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு குறித்த நிலப்பகுதி
அடாத்தாக
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கமநல சேவை
அதற்கான விவசாய வீதி ஒன்றும் அமைப்பதாக தெரிவித்துசுமார் நான்கு இலட்சத்து
ஐம்பதாயிரம் ரூபா அரச நிதியும் விவசாயிகளிடமிருந்து கமநல சேவை நிலையத்தின்
அபிவிருத்தி உத்தியோகத்தரின் அனுமதியுடன் அறவிடப்பட்ட பெருந்தொகை நிதியும்
முறைகேடாக பயன் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், குறித்த பகுதியில் வீதி எதுவும் அமைக்காது சிறிய மண் அணை மாத்திரம்
அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக
ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த பிரதேசத்தில் விவசாய வீதி ஒன்று அமைப்பதற்கான
முன்மொழிவு செய்யப்பட்டு அதற்கான நிதி ஒடுக்கீடுகளும் செய்யப்பட்டிருந்தது
இந்த நிதியை பயன்படுத்தி குறித்த குளத்தின் நீரேந்து பிரதேசம்
ஆக்கிரமிக்கப்பட்டு அத்துமீறல் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் குறித்த நிதியை
பயன்படுத்தி வீதி அமைப்பு என்ற பெயரில் நிதி முறைகேடு இடம்பெற்றுள்ளது.
குளங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த
திணைக்களம் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்திருப்பது கவலைக்குறியது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பரந்தன் கம நல சேவை நிலையத்தின் அபிவிருத்தி
உத்தியோகத்தரை எமது பிராந்திய செய்தியாளர்தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வீதி அமைப்பதற்கான வேலைகள்
தமது திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன எனவும், அது தொடர்பாக தான் நேரில்
சென்று வீதி எதனையும் பார்வையிடவில்லை அதற்கான அரச நிதி
விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.