இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
மொட்டுச் சின்னம் நிச்சயம் இருக்கும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. யார் அந்தச் சின்னத்துக்குரிய வேட்பாளர் என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய
அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள போர் பதற்றம் : ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
”எமது கட்சி முன்நிறுத்தப் பரிசீலிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில்
விக்ரமசிங்கவும்(
Ranil Wickremesinghe) ஒருவர்.
அவரோ அல்லது வேறு எவரோ ஒருவர் நிச்சயம் மொட்டுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை போட்டியிடுவார் என்பது உறுதி.
எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். ஆனால் வேட்பாளர் யார் என்பது தான்
தீர்மானிக்கப்பட வேண்டும்.
கட்சி உரிய சமயத்தில் அதைத் தீர்மானித்து ஜனாதிபதி வேட்பாளர் யார் என
அறிவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் கடுமையாகும் சட்டம்
வயது வந்தோருக்கான இணையதளங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |