இலங்கையில் மிகவும் பேசு பொருளாகியுள்ள சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம்
காணப்படுகிறது.
இதனை நீக்க வேண்டும் என்பது பலரதும் கோசங்களாக காணப்படுகிறது.
வடக்கு கிழக்கின் பல இடங்களில் இதை நீக்க வேண்டும் என்ற பல போராட்டங்களை
நடாத்தியுள்ளதுடன் நடாத்தியும் வருகின்றனர்.
சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளை மீறும்
இதன் மூலம் அப்பாவி பொது மக்கள்
உட்பட பலரும் பாதிக்கப்பட்டு சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளதுடன் பலர் இன்னும்
அனுபவித்து வருகின்றனர்.
இதனால் இச் சட்டம் கொடூரமானது என்பதை பலரும் கூறி
வருவதுடன் இது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் விளக்குகிறார்.
01.பயங்கரவாத தடை சட்டம் தொடர்பிலான தங்களின் கருத்து ?
பதில்: சர்வதேச சட்டங்கள் ,மனித உரிமைகள் தராதரங்கள் ,விழுமியங்கள் போன்றவற்றை
வைத்து பார்க்கின்ற போது 1979ல் உருவாக்கப்பட்ட தற்காலிக ஏற்பாடுகளின்
அடிப்படையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் (PTA) சர்வதேச மனித உரிமைகள்
கோட்பாடுகளை மீறுகின்றது.
அதன் காரணமாக இந்த சட்டத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்.
நிறைய பேரின் ஆதங்கம் இதனை இல்லாமல் ஆக்கினால் என்ன செய்வது என்பதும்
பேசுபொருளாக உள்ளது.
2019ல் இடம் பெற்ற ஈஸ்டர் பயங்கரவாத குண்டு தாக்குதலை இந்த
சட்ட மூலம் தடுக்காமல் போனது சட்டம் இருக்கும் போதே . இப்போதைக்கு இருக்கும்
சட்டம் என்ன தேவைக்கு உள்ளது தேவையை நிறைவேற்றும் முகமாக இச் சட்டம் இல்லை,
மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தக் கூடிய சட்டமாகவே உள்ளது.
எனவே தற்போதுள்ள பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும்.
தடைச் சட்டத்தின் கீழ் கைது
கேள்வி.02: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைது விசாரனைகள் தொடர்பில்
தங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்: கைது செய்யப்படுகின்ற போது பொலிஸார் பயங்கரவாத தடைச் சட்டம் அல்லாத
விடயங்களை வைத்தும் கைது செய்மலாம்
உதாரணமாக பிள்ளையானை பயங்கரவாத தடைச்
சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் ஆனால் பல்கலைக்கழக விரிவுரையாளரை கடத்தி
கொலை செய்தமைக்காக என்று ஆனாலும் ஆட்கடத்தல் கொலை என்பது சாதாரண தண்டனைச்
சட்டக் கோவையில் உள்ளது.
பிள்ளையானை கடந்த விடுதலை புலிகளின் உறுப்பினர் என்ற
வகையில் தான் கைது செய்துள்ளார்கள்.
அந்த அடிப்படையில் இதையும் வைத்து கைது
செய்துள்ளார்கள். சாதாரண சட்டத்துக்கு வருகின்ற குற்றங்களுக்குள் வருகின்ற
குற்றங்களை கூட பயங்கரவாத தடைச் சட்டங்களை வைத்து கைது செய்கிறார்கள்.
ஏனெனில்
சட்டத்தில் பயங்கரவாத சட்டம் குறுகிய சரியான முறையில் தெளிவாக சொல்லப்படவில்லை. சட்டங்களை உருவாக்கும் போது அடிப்படை கோட்பாடு என்னவெனில் அந்த சட்டம் என்ன
நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படையில் அதன் சொற்கள் ஒவ்வொன்றாக
வரைவிலக்கணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
சந்தேகத்துக்கோ அல்லது மாற்று
விதமான முறையிலோ மயக்க நிலைகளை கொண்டிருக்கின்ற நிலையில் சட்டங்கள் இருக்கக்
கூடாது.
இது தான் சட்டத்தின் கோட்பாடாகும். பயங்கரவாத சொல் சரியாக
கூறப்படவில்லை. முறை தவறி பயன்படுத்துவதை கண்டுள்ளேன்.
இதன் மூலம் கைதாகினால்
ஒரு வருடம் வரைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் அமைச்சர் கையொப்பமிட்டு
சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கலாம் வழக்குக்கு முன் சந்தேகத்தின் பேரில்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கையொப்பமிட்டு மேற்கொள்ளலாம்.
கைது என்பதும்
தடுத்து வைப்பதும் நீதிமன்ற பொறி முறைகள் ஊடாக செல்ல வேண்டும்.
ஆனால் இந்த
பொறுப்பு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட காரணத்தால் நீதிமன்ற பொறி முறையின்
வெளியில் சென்று நிருவாக பொறி முறைகள் ஊடாக செல்கின்றது.
இவ்வாறான நிலையில்
கேள்விக்குட்படுத்தும் வாய்ப்பு கிடையாது. இதனால் நிருவாக துறையை தடுத்து
வைப்பதை உறுதிப்படுத்துகின்றது.
மிக மோசமான சட்டம்
எத்தனையோ பேர் போதுமான ஆதாரங்கள் இன்றி
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்படுகிறார்கள். நீண்ட காலம்
தடுத்து வைக்கப்பட்டு பிறகு ஆதாரங்கள் இன்றி பிணையில் விடுவிக்கப்படுகின்ற
தன்மையும் காணப்படுகிறது.
அண்மையில் கைதான முஹம்மட் சுகைல் என்பவரின் வழக்கு
விசாரணையும் இதனையே சொல்கிறது. இச் சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம்
ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
சாதாரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் வேறு எந்த
விதமான ஆதாரங்களோ சாட்சியங்களோ இல்லாத பட்சத்தில் உரிய நபர் குற்றத்தை ஒத்துக்
கொண்டு எழுத்து மூலமாக வழங்கினால் கூட போதிய ஆதாரங்கள் இன்றி வழக்கு தொடர
முடியாது.
ஆனால் இங்கு வந்து குற்ற ஒப்புதல் மூலம் குற்றவாளியாக அடையாளம் காண
முடியும். தடுப்பு உத்தரவு மூலம் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டால் அதாவது
நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சித்திரவதை இன்றி 14 நாட்கள் ஆகக்
கூடுதலாக தடுத்து வைக்கலாம்.
அதற்கு மேல் செய்வதாயின் நீதவானிடம் முன்னிலையாக வேண்டும் இது எதற்காக என்றால் பொலிசாருடைய தடுப்புக் காவலில் இருக்கும் போது
பாதுகாப்பாக சித்திரவதை இடம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆனால்
இங்கு மூன்று மாதங்கள் அதிக சித்திரவதை இடம் பெறலாம்.
இது ஒரு வருடத்துக்கு
நீடிக்கப்படலாம். குற்ற ஒப்புதல் மூலமான வழக்கானது குறித்த நபர் எழுதிக்
கொடுப்பதன் மூலமும் வெறும் தாளில் கையொப்பமிட்டு பொலிஸார் அதனை எழுதிக் கொள்ளும்
சந்தர்ப்பமும் காணப்படுகிறது.
எனது அனுபவத்தின் போது நான் கண்டது வாக்கு
மூலத்தின் இடையில் கையொப்பம் காணப்பட்டது கையொப்பத்தை பெற்று வேறு ஒருவர்
மூலமாக குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் எழுதப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மூலமாக
பிணை வழங்க வாய்ப்பு இல்லை உயர் நீதிமன்றத்தில் தான் இதனை மேற்கொள்ள முடியும்.
மஜிஸ்ரேட் நீதிமன்றில் பிணை வழங்க முடியாது பிணை மறுக்க கூடிய வாய்ப்பும்
காணப்படுகிறது குறிப்பாக இதற்கு பிடியானை தேவையில்லை எனவே தான் பயங்கரவாத தடை
சட்டம் மிக மோசமான சட்டமாக காணப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள்
கேள்வி 03. இந்த சட்டத்தை நீக்குவது பற்றி தங்களின் கருத்து என்ன?
பதில் : சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் தராதரங்கள் நியமமங்களுக்கு
அடிப்படையாக கொண்டு அமைக்கப்படாததன் காரணமாக அதன் காரணமாக பயங்கரவாத தடை
சட்டம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதனால் பல மட்டங்களிலும் பல
தரப்புக்களிலும் உள்ளூர் தேசிய மட்டங்களிலும் சர்வதேச அரங்கிலும் நீக்கப்பட
வேண்டும் என கூறுகிறார்கள்.
இதனால் என்னை பொறுத்தமட்டுக்கும் சட்டம் நீக்கப்பட
வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
கேள்வி.04 :இலங்கையினுடைய பயங்கரவாத தடை சட்ட நிலவரம் என்ன?
பதில் : இலங்கை அரசாங்கம் கூறுகிறது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் ஆனால் அதற்கு
பதிலாக இன்னுமொரு எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வருவோம் என்று பிறகு சட்ட மூலமாக
கொண்டு வந்து எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கைவிடப்பட்டதை அறிவோம்.
அரசாங்கம்
பயங்கரவாத தடை சட்டம் தேவை என்பதற்காக புதிய சட்டத்தை கையாள வேண்டும் என
கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இலங்கையை எடுத்து பார்த்தால் ஏற்கனவே
இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் அல்லாத ஏனைய சட்டங்களை போதுமான காரணங்களை
கொண்டிருப்பதால் வேறாக PTA தேவையில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற நிலை
காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சர்வதேச சட்டங்களை உருவாக்குவார்கள் இதில் ICCPR
என காணப்படுகிறது அதனடிப்படையில் பயங்கரவாத சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக சிறுவர் சமவாயங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சட்டங்களை
இலங்கை ஒரு உறுப்புரிமை நாடு என்ற வகையில் அதனை பின்பற்ற வேண்டும்
உறுப்புரிமை நாடு என்ற வகையில் அதன் கோட்பாடுகளை சட்டங்களை நடைமுறைப்படுத்த
வேண்டும் என கூறுகின்றனர்.
ஆனால் அதே ஐக்கிய நாட்டு சபை பயங்கரவாத சட்டத்தை
கட்டுப்படுத்த இல்லாதொழிக்கவும் சட்டங்களை இயற்றியுள்ளனர் இதனை வைத்து
பார்க்கும் போது ஏனைய சட்டங்களை மாத்திரம் உள்வாங்கா பயங்கரவாத சட்டத்தை
மாத்திரம் கேள்விக்கு உட்படுத்துவது தொடர்பான வாதிப் பிரதி வாதங்களும்
காணப்படுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை
இதனை செயற்பாட்டு ரீதியாக பார்க்க வேண்டும் பயங்கரவாதம் என்பது நாடு கடந்த
பாரிய அச்சுறுத்தல் இதனை கையாள்வதற்கு சட்டம் ஒன்று தேவை என்பதை ஐக்கிய
நாடுகள் சபையே கொண்டிருக்கின்றது.
உறுப்புரிமை நாடுகளும் சட்டத்தை ஏற்கவும்
பொறிமுறைகளை பின்பற்றவும் கடப்பாடுகள் காணப்படுகின்றது. எந்த அரசாங்கமாக
இருந்தாலும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துகின்ற அதிகாரபூர்வமான சட்டம்
தேவைப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்கினாலும் ஏதாவது ஒரு புதிய
சட்டத்தை கொண்டு வரத்தான் போகிறார்கள் சர்வதேச மனித உரிமைகள் தராதரத்துக்கு
அமைய சட்டங்கள் தொடர்பாக PTA சட்டத்தை உருவாக்கலாம் உள்ளது.
எனது எதிர்வு
கூறலும் இலங்கை அரசாங்கம் புதிய ஒரு சட்டத்தை உருவாக்கும் என்பதாகும். தற்போதைய அரசாங்கம் நீதி அமைச்சரின் கீழ் குழுவொன்றை உருவாக்கி மக்கள்
கருத்தறியும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள்
கோட்பாடுகளுக்கு அமைய அரசாங்கத்தை பொறுப்புக் கூறச் செய்யவும்
விழிப்படையவும் வைக்க வேண்டும் என்பதே தன்னுடைய கருத்தாகும்.
அநுர குமார
திசாநாயக்க பதவி ஏற்றதன் பின் ஜனாதிபதி செயலக சட்ட பணிப்பாளர் கூறியதாவது
பயங்கவாத தடைச் சட்டம் பிழையான சட்டமில்லை அது சரியான முறையில்
பாவிக்கப்பட்டால் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் நாங்கள் அவ்வாறு துஷ்பிரயோகம்
செய்ய மாட்டோம் சரியாக பயன்படுத்துவோம்.
அதனால் இச் சட்டத்தை பார்த்து அஞ்ச
வேண்டியதில்லை என கூறினார். ஆனால் மிக பிழை யாதெனில் பிழையான வாய்ப்பு
இருப்பதனால் தான் இதை கூறுகிறார்.
அப்பட்டமான பல கைதுகள் இடம் பெற்றுள்ளது. இதன்
மூலம் தமிழ் முஸ்லீம் சமூகம் கடந்த காலங்களில் அனுபவித்துள்ளோம்.
பொறுப்பற்ற
விளக்கமற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளூர் பொறி முறைகளுக்கு
ஏற்றவாறும் சர்வதேச மனித உரிமைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.