இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் தலைவி சமரி அத்தபத்துவிற்கு ஜனாதிபதி வாழத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்திய திறமைக்கும், சமரி வெளிப்படுத்திய அபார திறமைக்கும் ஜனாதிபதி குறித்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊவா மாகாண சபையை முற்றுகையிட்ட பட்டதாரி இளைஞர் – யுவதிகள்
தொலைபேசியூடாக வாழ்த்து
தென்ஆபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 139 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்கள் குவித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமைக்காகவும் இலங்கை மகளிர் கிரிக்கெட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றமைக்காகவும் இலங்கை மகளிர் அணித் தலைவி சாமரி அதபத்துவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசியூடாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் கொண்ட வெற்றி இலக்கினை எட்டி, செய்த சாதனை வெற்றியாகவும் இது பதியப்பட்டுள்ளது.
இந்த வெற்றி ஓர் உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது
பிரித்தானியாவில் குடியுரிமை விற்பனை : உள்துறை அலுவலகத்தில் மோசடி அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |