நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மார் மக்களுக்கு நிவாரணம் வழங்குதற்காக இலங்கை விமானம் புறப்பட்டுள்ளது.
மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தலைமைத் தேரர்களின் பங்களிப்புகளுடன் சேகரிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடன் குறித்த விமானம் சென்றுள்ளது.
அத்தோடு, இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் பேரிடர் நிவாரணக் குழுவும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகமும் சிறிலங்கன் விமான நிறுவனமும் இந்த நடவடிக்கையை ஆதரவு வழங்கியுள்ளாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.