சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை மற்றும் அமெரிக்க டொலரின் (USD) பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலையில் நேற்று உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்ததுள்ளமை இந்நிலையை மேலும் மோசமடைய செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க டொலர் குறியீடு
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 0.2 வீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 3,320.58
டொலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவிலும் நேற்று காலை 8.21 மணியளவில் தங்க விலை 0.3 வீதத்தினால்
உயர்ந்தது.
அத்துடன், வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டொலர் குறியீடு
0.2 வீதத்தினால் சரிந்து நிலவியதாக தெ வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
அறிக்கையிட்டுள்ளது.