முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொடவுள்ள தங்க விலை!

எதிர்வரும் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ரீதியில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழு (National Gem and Jewellery Authority) தெரிவித்துள்ளது.

உலக தங்க சந்தையில் 5000 டொலர் வரை தங்கத்தின் விலை பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் அண்மைய நாட்களாக திடீர் அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர் வீழ்ச்சி

அதன்படி, தற்போது நாட்டில் ஒரு பவுண் தங்கத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாயை விட குறைவடைந்துள்ளது.

வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொடவுள்ள தங்க விலை! | Price Of Gold Will Increase Abnormally Next Year

இவ்வாண்டில் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து குறைவடையும் என குறித்த ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த நாட்களில் தங்கம் வாங்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் பொதுமக்களுக்குத் தெரிவித்தார்.

தங்கத்தின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தங்கத்தின் விலைகள் எதிர்வரும் ஆண்டில் அதிகரிப்பதால் மக்கள் தங்கத்தில் தங்களது முதலீகளை மேற்கொள்ள முடியும் என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்